வவுனியா பறயநாலங்குளம் பகுதியில் 201 கிலோ கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்ற இளைஞன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர்.   

யாழில் இருந்து மன்னார் உயிலங்குளம் ஊடாக வவுனியா நோக்கி பயணித்த கூளர் ரக வாகனத்தை நேற்றையதினம் காலை 7 மணியளவில் வவுனியா பறயநாலங்குளம் சந்தியில் அமைந்துள்ள சோதனை சாவடியில் வழிமறித்த பொலிசார் அதில் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன் போது குறித்த வாகனத்தில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 201 கிலோ கேரளா கஞ்சாவினை மீட்டதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும், அதன் சாரதியையும் கைதுசெய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

சம்பவத்தில் வாகனத்தின் சாரதியான யாழ் பருத்திதுறை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் குருநாகல் பகுதியை சேர்ந்த ஒருவரிடமிருந்து குறித்த கூலர் வாகனத்தை வாடகைக்கு அமர்த்தியுள்ளதாக தெரிவித்த பொலிசார் மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி இரண்டுகோடியே 40 இலட்சம் ரூபாய் என தெரிவித்தனர்.

குறித்த கைது நடவடிக்கை வன்னி மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவின் ஆலோசனையில், பொலிஸ் அத்தியட்சகர்காளன திஸ்சலால் சில்வா, வீரக்கோன் ஆகியோரின் வழிகாட்டலில் பறயநாலங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி உப்புள் ராஜபக்சவின் தலைமையில், உபபொலிஸ் பரிசோதகர்களான சமரசிங்க, ஆனந்த, பொலிஸ் சாயன்களான 31132 குணரத்தின, 34457 கேரத், 61774 யெயசிங்க, 45865பண்டார, 61431 சதுரங்க, பொலிஸ் கான்ஸ்டபிள்களான 37774 ரதீசன், 36191 சேனாரத்தின, 74856மாலக்க, 92592குமார, 689751 ஜெயவர்த்தன ஆகியோரை கொண்ட பொலிஸ்குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர் இன்றையதினம் வவுனியா மேல் நீதி மன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.