கண்டி, நக்கிள்ஸ் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில், வன விலங்குகளை வேட்டையாடியாத கூறப்படும் பிரதான சந்தேக நபர் உட்பட மேலும் ஆறு பேரை எதிர்வரும் 7 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதிவான்  உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர்களை தெல்தெனிய நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார்  ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 7 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

கடந்த சில தினங்களாக முகப்பபுத்தகங்களிலும் இணையத்தளங்கலிலும் குறித்த சந்தேக நபர்கள் வேட்டையாடிய வன விலங்குகளின் படங்கள் வெளியாகின. 

இச்சம்பவம் தொடர்பாகப் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், பிரதான சந்தேக நபர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதுடன் இச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஆறு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்து தெல்தெனிய பதில் நீதிவான் சிரோன்மணி நியோகம முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

இதையடுத்து எஸ்.எம்.சிராஜ், கொடித்துவக்கு ஆரச்சிகே நலிந்த வீரதுங்க, கொடிதுவக்கு ஆரச்சிக்கே ரவீந்திர வீரதுங்க, சந்திர சேகர் வியஜயகாந், கலபட லியனகே,ருசின் சன்ஜீவ சமரநாயக்க மற்றும் எம்.நந்தகுமார் ஆகிய சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.