தேர்தல் தொடர்பில், இதுவரை 24 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்கன் கேள்விகளுக்கு பதில் கூறும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து யாழ்ப்பாணத்தில் 24 தேர்தல் முறைப்பாடுகள் தேர்தல் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்

வேட்பாளர்களின் பதாதைகளை அகற்றும் நடவடிக்கைகள், பிரதேச செயலக ரீதியில், பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்