கடந்த 24 நாட்களில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது : 122 துப்பாக்கிகள் மீட்பு

01 Jul, 2020 | 08:46 PM
image

(செ.தேன்மொழி)

நாடளாவிய ரீதியில் கடந்த 24 நாட்களாக பொலிஸாரும் , பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்து வரும் விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 46 ஆயிரத்து 617 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்போது போதைப் பொருட்கள் , சட்டவிரோத மதுபானம் , மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதற்கமைய கடந்த மாதம் 6 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை ஆறு மணிமுதல் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை நள்ளிரவு 12 மணிவரை சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் , இதன்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் போதைப் பொருள் வைத்திருந்தமை தொடர்பில் 10 ஆயிரத்து 968 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 6140 பேர் ஹெரோயின் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து 7 கிலோ 1413 கிராம் 770 மில்லி கிராம் தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா போதைப் பொருளுடன் 4413 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து 295 கிலோ 952 கிராம் 205 மில்லிகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை ஐஸ் போதைப் பொருளுடனும் 415 சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 1025 கிராம் 761 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபானம் தொடர்பிலும் சுற்றிவளைப்புகள் இடம்பெற்றுள்ளதுடன் , 9198 சந்தேக நபர்களிடமிருந்து நான்கு இலட்சத்து 1876 லீட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வெத்திருந்தமை தொடர்பில் 99 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , ஆயுதங்கள் வைத்திருந்ததாக 89 பேரும் , வெடிமருந்துகளை வைத்திருந்ததாக 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 11 ரி - 56 ரக துப்பாக்கிகளும் , ஒரு ரி - 81 ரக துப்பாக்கியும் , 26 குழல் 12 ரக துப்பாக்கிகளும் , 26 கல்கட்டஸ் ரக துப்பாக்கிகளும் , 46 ரிபீடர் ரக துப்பாக்கிகளும், 9 புதியவகை துப்பாக்கிகளும், பிஸ்டோல் மூன்றும்; , 578 தன்னியக்க தோட்டாக்களும் மற்றும் மூன்று வாள்களும் , கத்தி இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை  367 கிராம் தொகை வெடி மருந்து , 23 டெட்டனேட்டர்கள் மற்றும் 13 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 9077 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேற்கூறிய குற்றச் செயல்களுக்குள் உள்ளடங்காத வேறுவகையான குற்றச்செயல்களை புரிந்தமை தொடர்பிலும் 17 ஆயிரத்து 275 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதன் நோக்கிலே பொலிஸார் இந்த விசேட சுற்றிவளைப்பை முன்னெடுத்து வருகின்றனர். அதற்கமைய நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த விசேட சுற்றிவளைப்பிலே 24 நாட்களுக்குள் 46 ஆயிரத்து 617 பேர் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04