சிலாபம் நதி முகத்துவாரம் பகுதியில் மீன்பிடி  படகு நீரில் மூழ்கியதில் மீனவரொருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் சிலாபம் வெல்ல பகுதியை சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகின்றது.

49 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை படகிலிருந்த மற்றுமொருவர் உயிர் தப்பியுள்ளார்.