கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சரக்கு ரயில் எண்ணெய்க் கொள்கலனொன்று ஒன்று 01.07.2020 அன்று தடம் புரண்டுள்ளதனால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அம்பேவெல மற்றும் பட்டிப்பொல ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் ரயிலின் சரக்கு பெட்டி பகுதியே தடம் புரண்டுள்ளது.

ரயில் பாதையை சீரமைத்து வருவதாகவும் எனினும் இரவு நேரத்திற்குள் சீரமைத்து மலையக ரயில் சேவையை வழமைக்கு திருப்பலாம் என ரயில் கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவிக்கின்றது.