மதுகம, மீஹதென்ன ஆரம்ப பாடசாலைக்குள் நுளைந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரதி அமைச்சர் பாலித தெவரபெருமவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென அகில இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பிலான கடிதமொன்றை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் தெவரபெருமவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஆசிரியர் சங்கம் கடும் நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்தார்.