அலரிமாளிகையில் இன்றையதினம் தமிழ் ஊடகவியலார்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்.

இதன்போது, அவருக்கு ஒரு கூடை கறுத்தக்கொழும்பான் மாம்பழம் வழங்கப்பட்டு, இது யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், மாம்பழம் ஒன்றை சுவைத்த பிரதமர் மஹிந்த, யாழ்ப்பாண மாம்பழம் மிகவும் அருமையான சுவைகொண்டது என்று கூறி சுவைத்து மகிழ்ந்தார்.