விளையாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழுவில் நாளை காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மகிந்தாநந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில்  வாக்குமூலம்  வழங்குவதற்காகவே குமார் சங்கக்காரவை இவ்வாறு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2011 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா மற்றும் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க ஆகியோரிடம் ஆட்டநிர்ணயம் தொடர்பில் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.