நடிகர் ஜீவா பொலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் ‘83’ என்ற திரைப்படம், டிசம்பர் மாதத்தில்  வெளியாகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய துடுப்பாட்ட அணி 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது. இதன் 37வது ஆண்டு நிறைவு விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. இதன்போது இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் ‘83’ என்ற பொலிவுட் திரைப்படத்தின் வீடியோ இணையத்தில் வெளியானது. இதற்கு எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வரவேற்பும் கிடைத்தது.

Ranveer Singh to Jiiva: Bollywood recreates 1983 World Cup-winning ...

இந்நிலையில் இந்தப் திரைப்படம் டிஜிற்றல் தளத்தில் நேரடியாக வெளியாகும் என்று தகவல்கள் வெளியான நிலையில், தற்போது படக்குழுவினர் படத்தை டிசம்பர் மாதத்தில் நத்தார் தினத்தன்று வெளியிட திட்டமிட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்கள். இதனால் திரைஉலக ரசிகர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

இப்படத்தில் பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இந்தியத் துடுப்பாட்ட அணியின் கப்டன் கபில்தேவ்வாகவும், தமிழ் திரையுலக நடிகர் ஜீவா, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தாகவும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் மூலம் நடிகர் ஜீவா முதன்முதலாக பொலிவுட் திரையுலகில் நடிகராக அறிமுகமாகிறார். இந்தப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் டிசம்பர் 25 ஆம் திகதியன்று வெளியாகவிருக்கிறது.