கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்கள், இந்த நோய் குறித்த அச்சத்தால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதன் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை பாதித்து, அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை ஐந்து லட்சத்திற்கும் மேலானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அத்துடன் தெற்காசிய நாடுகளில் நாளாந்தம் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் மரணமடைகிறார்கள். அதே தருணத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டவர்கள், சிகிச்சை பெற்று பூரண நலம் பெற்று திரும்புவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அத்துடன் மருந்தில்லாமல் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

Coronavirus: Risk of death rises with age, diabetes and heart ...

இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பால் மரணமடைந்தவர்களின் மூலம் தொற்று பரவும் என்ற அச்சத்தால் கொரோனா நோயாளிகளை இந்த சமூகத்தில் உள்ளவர்கள் புறக்கணிக்க தொடங்கியிருக்கிறார்கள். அத்துடன் கொரோனா தொற்று ஏற்பட்டாலே.. மரணமடைவோம் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக தற்போது மருத்துவர்கள் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கும், பரிசோதனை மூலம் பாதிப்பை உறுதி செய்தவர்களுக்கும்அதற்கான சிகிச்சையுடன், உளவியல் சிகிச்சையும் அவசியம் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.

WHO: Coronavirus mortality rate 10 times worse than flu

இதுதொடர்பாக உளவியல் நிபுணர் சந்திரமோகன் கூறுகையில்,“ எம்மில் பலரும் கொரோனா நோயை ஒரு கொடிய நோயாக பார்க்கிறார்கள். அது உண்மையல்ல. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமே தவிர, இறப்பவர்களின் சதவீதம் வெகு குறைவு. பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, கண்காணித்து சிகிச்சை அளித்தால் குணமடைவார்கள். அதனால் இந்த நோய் குறித்து அச்சம் கொள்ளவோ, மன பாதிப்பு அடையவோ தேவையில்லை. தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையுடன், மனநல ஆலோசனையும் வழங்க தொடங்கியிருக்கிறார்கள்.” என்றார்.