தமிழ்நாட்டின் நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் நெய்வேலியின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 5 பேரை காணவில்லை எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த மே மாதம், கொதிகலனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.