சட்ட விரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட கசிப்பு கோடாக்களுடன் மூவர் கிளிநொச்சியில் கைது

By J.G.Stephan

01 Jul, 2020 | 03:12 PM
image

கிளிநொச்சி தருமபுரம் பொலிசாரினால் சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட 5 இலட்சத்து 45 ஆயிரம் மில்லி லீற்றர்  கோடா, சட்டவிரோதமாக காய்ச்சிய 75,000 மில்லி லீற்றர் கசிப்பு, கசிப்பு உற்பத்திக்காக பாவிக்கப்பட்ட 4 வயர் சுருள்கள் மற்றும் 7 பெரல்கள் என்பன கிளிநொச்சி தருமபுரம் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளதோடு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தியில் மேற்கொள்ளப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 5 லட்சத்து 45 ஆயிரம் மில்லி லீற்றர்  கோடா, சட்ட விரோதமாக காய்ச்சிய 75,000 மில்லி லிற்றர் கசிப்பு, கசிப்பு உற்பத்திக்காக பாவிக்கப்பட்ட 4 வயர் சுருள்கள் மற்றும் 7 பெரல்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.இதே போன்று கல்லார் பகுதியில் சட்ட விரோதமாக மணல் ஏற்றிய 3 உழவு இயந்திரம் மற்றும் டிப்பர் வாகனங்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right