திருகோணமலை மாவட்டத்தில் அஞ்சல் வாக்குகளை செலுத்த 15,200 பேர் தகுதி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. நடைபெறவுள்ள
பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் அஞ்சல் வாக்குகளை செலுத்த 15,200 பேர் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.

அஞ்சல் வாக்குகளை  தபால் திணைக்களத்திடம்  உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் செயற்பாடு சிறப்பாக  மாவட்ட செயலகத்தில் நேற்று(30.06.2020) நடைபெற்றதாக இதன்போது தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.