கிளிநொச்சி இரணைமடு விமானப்படை முகாமிலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்டு 27 கடற்படையினர் இன்று (01.07.2020) வெளியேறியுள்ளனர்.

குறித்த 27 கடற்படையினரும் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் எனப் விமானப்படை ஊடகப்பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட அனைத்து நபர்களும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முடித்துவிட்டதாகவும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் எவருமில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.

லெபனானில் இருந்து நாடு திரும்பிய 100 இலங்கையர்ககள் தற்போது பாலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளதோடு, மத்திய கிழக்கிலிருந்து நாடு திரும்யிய 151 இலங்கையர்கள் வன்னி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க  மேலும் தெரிவித்துள்ளார்.