கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டாரில் சிக்கியிருந்த 272  இலங்கையர்கள் இன்று புதன்கிழமை நாடு திரும்பினர். 

குறித்த 272 பேரும் கட்டார் தலைநகர் டோகாவிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.218 என்ற விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை 5.40 மணியளவில் இவர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

இந்நிலையில், கட்டாரில் சிக்கித் தவித்த  மேலும் எட்டு இலங்கையர்கள், கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR-668 என்ற விமானத்தில் இன்று அதிகாலை 1.45 மணியளவில் நாட்டை வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.