வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் ஜனக்க நந்த குமாரவுடன் ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் சிங்கள சுயேட்சை குழுக்களிலிருந்து அதன் பிரதிநிதிகள் உட்பட 256 பேர் தமது ஆதரவினை பொதுஜன பெரமுனவிற்கு வழங்கியுள்ளதுடன் அக்கட்சியின் உறுப்புரிமைகளையும் வன்னி மாவட்ட வேட்பாளரிடமிருந்து நேற்று பெற்றுக்கொண்டனர். 

நேற்று மாலை ஓவியா விருந்தினர் விடுதியில் வன்னி மாவட்ட பொதுஜன பெரமுன வேட்பாளர் ஜனக்க நந்த குமார தலைமையில் இடம்பெற்றபோது பொதுஜன பெரமுன கட்சிக்கு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர் . 

பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை வழங்கி கலந்து கொண்ட மக்கள் மத்தியில் வேட்பாளர் ஜனக்க நந்த குமார உரையாற்றும் போது . கடந்த 10 மாதங்களுக்கு முன்னரே இந்த வன்னி மாவட்டத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சா , பிரதமர் மஹிந்த ராஜபக்சா , பசில் ராஜபக்சா ஆகியோர் என்னிடம் 2019 ஆம் ஆண்டு இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பணியாற்றியதற்காக என்னிடம் பொறுப்புத்தந்தார்கள் நான் இந்த வன்னி மாவட்டத்தில் பிறக்காவிட்டாலும் பல கிராமங்களுக்கு சென்று இங்குள்ள சிக்கல்களை தெரிந்துவைத்துள்ளேன் . 

300 ற்கும் மேற்பட்ட தமிழ், சிங்கள கிராமங்களுக்கு சென்றிருக்கின்றேன் . இங்கு சென்று பார்வையிட்டபோது நான் தெரிந்து கொண்டேன் இங்குள்ள மக்கள் மிகவும் வசதியற்ற நிலையில் இருப்பதை அங்குள்ளவர்களின் வீடுகளைப்பார்த்தால் அங்குள்ளவர்கள் எவ்வாறு இந்த வீடுகளில் வசிப்பார்கள் என்று நான் நினைத்திருந்தேன்.

 

அங்குள்ள சிறுவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் எடுப்பதற்காக போத்தல்களுடன் இரண்டு மூன்று கிலோமீற்றர் தூரம் செல்வதை அவதானித்தேன் அதேபோல பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் நீண்ட தூரம் நடந்தே செல்கின்றார்கள் . அங்குள்ள இளைஞர்கள் யுவதிகளிடம் நான் கலந்துரையாடினேன் . அங்குள்ள அதிகளவானவர்கள் திருமணம் முடிக்கவில்லை நான் நீங்கள் ஏன் திருமணம் முடிக்கவில்லை என்று கேட்டபோது இங்குள்ள சிறிய

வீடுகளிலிருந்து கொண்டு நாங்கள் எவ்வாறு திருமணம் முடிப்பது என்று கேட்கின்றார்கள் . அம்மா , அப்பா , சகோதரர்களுடன் எவ்வாறு அந்த வீடுகளில் வசிப்பது என்றும் கேட்கின்றார்கள். 

அவர்களுக்கு எந்தவொரு வேலைவாய்ப்புக்களும் இல்லை . இங்குள்ள மக்கள் ஒவ்வொரு முறையும் வாக்களித்துவிட்டு ஏமாற்றங்களுடனே காத்திருக்கின்றார்கள் . சிங்கள, தமிழ் , முஸ்லிம் என்ற பேதங்கள் எங்களிடம் இல்லை கட்சி பேதங்கள் இல்லை நான் இங்கு வந்திருக்கின்றேன் இந்த வன்னி மாவட்டத்தை கட்டியெழுப்புதவற்காக நீங்கள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்புக்களை தாருங்கள் இங்குள்ளவர்களின் பிரச்சினைகள் நீண்டகாலமாக தீர்க்கப்படவில்லை இங்கு நிறை விதவை பெண்கள் விஷேட தேவைக்குட்பட்டவர்கள் இருக்கின்றார்கள் . அவர்களிடம் சொல்லியுள்ளேன் விரைவில் உங்களது பிரச்சினைகளை தீர்த்துவைப்பேன் என்று தற்போது எமது நாட்டில் ஜனாதிபதியாக இருப்பவர் அறிவான புத்திசாலியான ஒரு மனிதர் அவர் இந்த நாட்டை விரும்பி நேசிக்கக்கூடிய ஒருவர் இந்நாட்டை வழிநடாத்தி முன்னெடுக்கக்கூடிய ஒருவர் என்னுடைய ஒரு விருப்பம் எனது பிள்ளைகள் வாழ்வதுபோல் இங்குள்ள பிள்ளைகளும் வாழவேண்டும்.

நான் அரசியலுக்கு வந்தது பணம் சம்பாதிக்க இல்லை இந்தச் சிந்தனைகளை வெற்றிகொள்ள உங்களது ஒத்துழைப்புக்களை எனக்கு வழங்கவேண்டும் . நீங்கள் எனக்கு உதவி செய்தால் நான் மனப்பூர்வமாக உங்களுக்கு உதவி செய்வேன் . எனக்கு வேறு ஒன்றும் தேவையில்லை உங்களுடைய வாழ்வில் எனது பெயரை நினைவு வைத்திருந்தால் போதும் என்று மேலும் தெரிவித்துள்ளார் .