கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து, 193 பேர் விசேட விமானம் மூலம் இன்றுக் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். 

விமான நிலையத்தில் வந்திறங்கிய அனைவரையும் பி.சீ. ஆர். பரிசோதனைகளுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.