இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே இலங்கையின் தெரிவுகளும் சவால்களும்

30 Jun, 2020 | 08:38 PM
image

-கலாநிதி தயான் ஜயதிலக

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டாபோட்டி ஆசிய - பசுபிக் பிராந்தியத்தில் அல்லது பரந்தளவிலான இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் தீவிரமடையுமானால் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான முரண்பாடுகளின் சமர்க்களம் தெற்காசியாவிலேயே நிலைகொள்ளும் என்பதை லடாக் மோதல்கள் வெளிக்காட்டுகின்றன.

பல்துருவ உலக ஒழுங்கில் ஆசிய யுகமொன்றாக 21 ஆம் நூற்றாண்டை மாற்றும் கனவு இமயமலையில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் 2020 ஜுன் நடுப்பகுதியில் கலைந்துபோனது என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

India-China Face-Off:`மே மாதம் முதலே பதற்றம் ...

மூர்க்கத்தனமானதும், கவலைக்குரியதுமான முறையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலேற்பட்ட கைகலப்பும், உயிரிழப்புக்களும் ஒரு ஆயுதமோதலாக விரிவடையக்கூடிய சாத்தியமில்லாதிருக்கலாம். ஆனால் உறவுமுறிவைக் குறிப்பதாக அது அமைகிறது: இந்தப் பிளவு முக்கியமான பல்வேறு உலக அரங்கங்களிலும், முன்முயற்சிகளிலும் எதிர்மறையான தாக்கத்தைக் கொண்டிருக்கும். அடிப்படையில் இது ஆசியாவில் நீண்ட ஆனால் ஒரு தணிந்த நிலையிலான பனிப்போரைத் தொடக்கிவைக்கும். அந்தப் பனிப்போர் உலகலாவிய அணிசேருகைகளையும், சகல பிராந்தியங்களிலும் உள்ள சகல பிராந்தியங்களிலும் உள்ள சகல சக்திகளினதும் ஒட்டுமொத்த மூலோபாய சமநிலையை வடிவமைப்பதில் முக்கியமான பங்காற்றும், அத்தோடு அது எமது தெற்காசியப் பிராந்தியத்தில் மூலோபாய விசையையும் மீள வடிவமைக்கும்.

அமெரிக்க, சீனா மற்றும் ரஷ்யா என்ற மிகப்பெரிய வல்லரசுகளுக்கு இடையிலான உறவுமுறையினரிலும், இந்தியா போன்ற வல்லரசுகளும் ஈரான், துருக்கி, இந்தோனேசியா போன்ற வளர்ந்துவரும் வல்லாதிக்க நாடுகள் இந்தப் பெரிய முக்கோணம் தொடர்பில் ஆற்றுகின்ற வகிபாகமே உலகின் இன்றைய வரலாற்றை இயக்குகின்றன. முன்னுணரக்கூடிய எதிர்காலத்திலும் இவையே இயக்கும்.

புதிய இயக்கவிசை

இந்தியா ஒரு முக்கியமான வல்லமை கொண்ட நாடு. சீனாவின் எழுச்சியுடன் தொடர்புபட்ட நிலைவரங்களுடன் நோக்குகையில் கடந்த 15 வருடங்களாக இந்தியா அமெரிக்காவுடன் ஒரு மூலோபாயத் தோழமையை வளர்த்துக்கொண்டிருப்பது உண்மை என்கின்ற அதேவேளை, இந்தியாவின் பருமனும் சுய பிம்பமும் பெருமளவிற்கு ஒரு நெகிழ்வுத்தன்மையான போக்கை அதைக் கடைப்பிடிக்கச் செய்திருக்கின்றன. அதன் விளைவாக சாத்தியமானளவிற்குப் பல தெரிவுகளுக்கான வாய்ப்புக்கள் இந்தியாவிற்குக் கிடைக்கின்றன. இந்தியாவின் அந்தப் பாத்திரத்தை ரஷ்யா எப்போதுமே நம்பத்தக்கதாக மதித்து வந்திருக்கிறது.

ஆனால் சீனாவுடனான அண்மைய மோதலுக்குப் பிறகு இந்தப் பாத்திரம் மீள் வடிவமைப்பிற்கு உள்ளாகக்கூடும். உலகலாவிய சமநிலையில் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கூடுதலானளவிற்குக் கட்டுறுதியான பெரிய மூலோபாயத் தோழமைக்குள் அமெரிக்காவுடன் இந்தியா பிரவேசிப்பதற்கான பெருமளவு சாத்தியங்கள் உள்ளன. அவ்வாறு தோன்றக்கூடிய நிலைவரம் பல்தரப்பு அணுகுமுறையில் நாட்டங்கொண்ட ஜோபிடனை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யக்கூடிய விவேகம் அமெரிக்க வாக்காளர்களுக்கு இருக்குமானால், சர்வதேச தலைமைப் பாத்திரத்தை அமெரிக்கா மீண்டும் பெறுவதற்கு உதவியாக அமையும்.

இந்தியா உலகில் பெருமளவு 'மென்சக்திக்கையிருப்பை" கொண்ட நாடாக இருக்கிறது. அண்மையில் இந்தியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபைக்குத் தெரிவாகியிருக்கிறது. ஐ.நா பொதுச்சபையில் இதற்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் மொத்தம் 199 வாக்குகளில் 184 வாக்குகளை இந்தியா பெற்றது. முன்னைய சந்தர்ப்பத்தில் பாதுகாப்புச்சபைக்கு இந்தியா தெரிவுசெய்யப்பட்ட சமயத்தில் அது ஜப்பானைத் தோற்கடித்திருந்தது. மேற்கிலிருந்து கிழக்கு மற்றும் வடக்கிலிருந்து தெற்கு வரை இந்திய நன்கு மதிக்கப்படுகிறது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யக்கூடிய ஒரே வல்லரசு ரஷ்யா மாத்திரமேயாகும். ஆனால் இரு நாடுகளும் எந்தளவிற்குக் கூருணர்வு கொண்டவை என்பதையும் ரஷ்யா அறியும். ஆசியாவின் இவ்விரு பெரிய நாடுகளுடனும் முக்கியமான நட்புறவையும் மாஸ்கோ கொண்டிருக்கிறது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மூளக்கூடிய பனிப்போர் ரஷ்யாவின் 'யூரேசியா" அல்லது 'பெரிய யூரேசியா" என்ற கோட்பாட்டைக் கவலைக்குரிய வகையில் கருத்திலெடுக்க முடியாதாக்கிவிடும்.

2019 - 2020 இல் சீனக்கப்பல்களுக்கும் வியட்நாமிய மற்றும் மலேசியப்படைகளுக்கும் இடையில் மோதல் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இமயமலையில் இடம்பெற்ற மோதல் சீனாவை மூலோபாய ரீதியில் கட்டுப்படுத்துவதற்கான அல்லது அதன் செல்வாக்கை இல்லாமல் செய்வதற்குப் பிரம்மாண்டமான மூலோபாய முயற்சிகளை வெளிப்படையாக ஆதரிக்கும் நிலைப்பாடுகளுக்கு இந்தியாவைத் தள்ளக்கூடும்.

சீனாவிற்கு இருக்கக்கூடிய பொருளாதார வல்லமை மற்றும் நாகரிக ஒட்டிணைவாற்றல் ஆகியவை காரணமாக பல்தேசிய சோவியத் சோசலிஸ குடியரசுகளின் ஒன்றியம் சிதறிப்போனதைப் போன்ற கதி சீனாவிற்கு நேரமுடியாது. ஆனால் 1970 கள் மற்றும் 1980 களில் அமெரிக்காவின் தோற்றத்தில் மட்டுமான ஒரு நேசஅணியாக நின்றுகொண்டு உலகலாவிய ரீதியில் சோவியத் யூனியனுக்குச் செய்ததை அமெரிக்காவுடன் சேர்ந்து நின்றுகொண்டு சீனாவிற்குச் செய்யக்கூடிய ஆற்றல் இந்தியாவிற்கு உள்ளது. இந்தியாவிற்கும், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான இராணுவ மூலோபாய உறவுமுறை மேம்படும். அதேபோன்றே சீனாவிற்கு எதிரான அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் நியூஸிலாந்து போன்ற ஐந்து நாடுகளுடனும் இந்தியாவின் மூலோபாய உறவுமுறை வளரும்.

China's Curious Absence From a BRICS Business Conference – The ...

'பிரிக்ஸ்" (BRICS) அமைப்பிற்குள் உறவுகள் பாதிக்கப்படும். அத்துடன் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பினது எதிர்காலமும் இடருக்குள்ளாகும்.

இந்தியாவின் மூலோபாய சிந்தனை எந்தத் திசையில் செல்லும் என்பதற்கான ஒரு சமிக்ஞையை இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நிபுணரென்று கருதப்படுகின்ற நிருபமா ராவ் அண்மையில் ' த இந்து" பத்திரிகையில் கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலுக்குப் பின்னரான நிலைவரம் குறித்து எழுதிய கட்டுரையில் காணக்கூடியதாக இருந்தது. திருமதி ராவ் இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளராகவும் சீனா, அமெரிக்கா மற்றும் இலங்கைக்கான தூதுவராகவும் பணியாற்றியவர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மிகவும் சுமுகமான உறவைக் கொண்டிருந்தவர்.

Nirupama Rao: From diplomat to singer

அவர் கூறியிருப்பதாவது:

'ஆசிய - பசுபிக் பிராந்தியத்திற்குள்ளும், அதற்கு அப்பர்லுள்ள உலகிலும் இந்தியாவிற்கு இருக்கக்கூடிய செல்வாக்கும், சமநிலைப்படுத்தும் வல்லமையும் எமக்குள்ள சமுத்திரப்பரப்பிற்குள் சீனாவின் உள்நுழைவிற்கு சரிசம வலிமை காட்டுவதற்கு கூடுதலானளவிற்குப் பயனுறுதியுடன் பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு பிரதான மூலோபாயப் பங்காளி நாடு என்ற வகையில் அமெரிக்காவுடன் கூடுதல் வலிமையுடனும், சந்தேகத்திற்கு இடமில்லாத வகையிலும் இந்தியா அதன் நலன்களை அணிசேர்த்துக் கொள்வதற்கும் ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் ஆசியான் அமைப்பு ஆகியவற்றுடனான அதன் உறவுகளில் கூடுதல் சக்தியைப் பாய்ச்சுவதற்கும் இது ஒரு வாய்ப்பான சந்தர்ப்பமாகும்.

இந்தப் புதிய இயக்க ஆற்றல் அமைதிக்காலத்தில் இலங்கையின் எந்தவொரு அரசாங்கத்தினாலும் முன்னர் எதிர்கொள்ளப்படாத மிகவும் பாரதூரமான வெளியுறவுக்கொள்கைச் சவாலைத் தோற்றுவிக்கும். இதை ஒருசில தசாப்தங்களில் தற்போதைய இலங்கை நிர்வாகமும், எதிர்காலத்தில் வரக்கூடிய எந்தவொரு நிர்வாகமும் எதிர்கொள்ளும்.

புதிய சரித்திரம், இலங்கையின் திரிசங்குநிலை

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பரந்தளவிலான போட்டி ஆசிய - பசுபிக் பிராந்தியத்தில் அல்லது பரந்த இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் விரிவடையுமேயானால் தெற்காசியாவிலேயே இரண்டு பெரிய ஆசிய நர்டுகளான சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான முரண்பாடுகளின் சமர்க்களம் நிலைகொள்ளும் என்பதை அண்மைய லடாக் - கல்வான் பள்ளத்தாக்கு மோதல்கள் காட்டியிருக்கின்றன. இவ்விரு நாடுகளினதும் முரண்பட்ட மூலோபாய நலன்கள் குவிந்திருப்பது தெற்காசியாவிலேயே ஆகும்.

உலகப்பொருளாதார வீழ்ச்சி மற்றும் அரசியல் நிலைமாறுதல்களின் பின்புலத்தில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புதிய உலகலாவிய பனிப்போரொன்றுக்குள் தணிந்த நிலையிலான ஒரு ஆசியப்போரையே இன்று உலகம் எதிர்நோக்குகிறது.

இப்போது தொடங்கியிருக்கும் புதிய வரலாற்றுக் காலகட்டத்தில் இலங்கையின் விதி குறுகிய சிந்தனைகொண்ட சுதேசிகள், குட்டி எதேச்சதிகாரிகள் மற்றும் உள்ளுர் இராணுவ இயந்திரத்தினால் தீர்மானிக்கப்படுகின்ற உள்ளக இயக்கவிசையினால் அல்ல. பெரிய வல்லரசுகளின் உலகலாவிய, கண்டங்கள் மட்டத்திலான, பிராந்திய மட்டத்திலான இயக்கவிசைகளினால் இறுதியில் தீர்மானிக்கப்படும். இதில் பெரிய வல்லரசுகளுக்கு இடையிலான போட்டாபோட்டிக்குள் வளர்ந்துவரும் வல்லாதிக்க நாடுகளின் அணிசேருகையும் அவற்றின் பாத்திரங்களும் செல்வாக்குச் செலுத்தும்.

இலங்கைக்கான சவால்கள் பன்மடங்கானவையும், சிக்கலானவையுமாகும். இந்து சமுத்திரத்தில் அதன் மூலோபாய அமைவிடத்தின் பின்புலத்தில் ஏற்கனவே போட்டாபோட்டிக்கான ஒரு களமாகக் கருதப்படுகின்ற இலங்கை ஒரே மையத்தைக் கொண்ட இவ்விரு பனிப்போர்களுக்கு இடையிலும் அகப்படுவதை எவ்வாறு தவிர்ப்பது? ஆசியாவின் இரு பெரிய நாடுகளுக்கும் இடையில் பூகோள ரீதியில் சமளவான தூரத்தில் இல்லாத இலங்கை நடைமுறையில் சரிசமத்தொலைவான கொள்கையொன்றை எவ்வாறு கடைப்பிடிக்க முடியும்?

ஒருபுறத்தில் அயலகத்திலுள்ள வல்லமைமிகு நேசநாடொன்றை சமநிலைப்படுத்தத் தொலைவிலுள்ள வல்லமைமிகு நேசநாடொன்றைப் பயன்படுத்துவதில் அரசுகள் நாட்டங்காட்டுகின்றன. ஏனென்றால் ஒரு அரசுக்கு அதன் அயல்நாட்டுடனேயே சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் கிளம்புவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் (கௌடில்யர்). ஆனால் மறுபுறத்தில் ஒரு அரசு அயல்நாட்டினாலேயே பெருமளவிற்குப் பாதிக்கப்படக்கூடிய சாத்தியமிருக்கிறது. அந்த நாடுகளின் பருமனும், பலமும் பெருமளவிற்கு அசமத்துவமானவையாக இருந்தால் பாதிக்கப்படுகின்ற தன்மை மிகக்கூடுதலாக இருக்கும். போட்டியும், முரண்பாடும் தீவிமடையக்கூடிய மாறுபட்ட ஒரு பின்புலத்தில் சிறிய அரசுகளினால் மேற்கொள்ளப்படுகின்ற வழமையான அதிகாரச்சமநிலைப்படுத்தல் நடவடிக்கைகள் வேறுபட்டதொரு அர்த்தத்தைப் பெறும்போது இந்தப் பிரச்சினை மேலும் அதிகரிக்கிறது.

அத்தகையதொரு பின்புலத்தில் சிறிய நாடுகளின் நகர்வுகளைப் பெரிய வல்லரசுகள், அவற்றின் வல்லமைக்கு இணையான நிறப்பிரிகைகளின் ஊடாக நோக்க முனைந்தது. அதனடிப்படையிலே முன்கூட்டியே அவற்றின் பிரதிபலிப்பை வெளிக்காட்டுவதில் நாட்டங்காட்டும். இலங்கை என்ன செய்யவேண்டும் என்பதைப்பற்றி வழமையாக வாதப்பிரதிவாதங்கள் மூளும் அதேவேளை, இலங்கை என்ன செய்யக்கூடாது என்பதைப் பற்றியும் தெளிவைப் பெற்றுக்கொள்வது முக்கியமான இருக்கலாம்.

இல்ஙகை இந்தியாவின் தென்முனையில் அமைந்திருக்கிறது. தனது வடமுனையில் இடம்பெற்ற மோதல்களுக்குப் பிறகு இந்தியா அதன் தென்முனை உட்பட சூழவுள்ள பகுதிகளின் விவகாரங்களை உயர்ந்தளவு மூலோபாய மற்றும் கூடுதலானளவு பாதுகாப்பு உணர்வுடனேயே நோக்கும். உலகலாவிய பாத்திரமொன்றை வகிப்பதற்கு நாட்டங்கொண்டிருக்கும் இந்தியா இவ்வாறு செய்வது தவிர்க்க முடியாதது. இத்தகைய சூழ்நிலையில் இந்தப் பனிப்போரில் சம்பந்தப்பட்டுள்ள இரண்டு பெரிய ஆசிய நாடுகளில் எந்தவொன்றுக்கும் முன்னுரிமை கொடுப்பதாகவோ அல்லது சிறப்பான உறவுமுறையொன்றைக் கொண்டிருப்பதாகவோ இலங்கை வெளிக்காட்டிக்கொள்ளாமலிருப்பது முக்கியமாகும்.

கோத்தபாயவிற்கு சீன ஜனாதிபதியின் கடிதம்

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்த கொழும்பு சீனத்தூதரகத்தின் தூதுக்குழுவினர் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் வாழ்த்தையும், கடிதத்தையும் கையளித்த பிறகு ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கை, இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே ஆழமாகும். உறவுமுறைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது. கோத்தபாயவிற்கான சீன ஜனாதிபதியின் கடிதமொன்று வருகிறது என்பது லடாக் பகுதியில் சீனப்படைகளுக்கும், இந்தியப்படைகளுக்கும் இடையில் மோதல் இடம்பெறுவதற்கு முன்னதாகவே தெரிந்திருப்பினும் கூட, அந்த மோதலுக்குப் பின்னரே அக்கடிதம் கையளிக்கப்பட்டது. இத்தகைய பின்புலத்தில் இலங்கைத் தரப்பினர் - சீனத்தூதுக்குழுவினரின் சந்திப்பு வெளிக்காட்டும் சமிக்ஞை தொடர்பில் மேலதிக எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும்.

Image

ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கை பின்வரும் விடயங்களை வரிசைப்படி முக்கியத்துவப்படுத்துவதாக அமைந்திருந்தது.

1. ஜனாதிபதி சீ ஜின்பிங் ஜனாதிபதி கோத்தபாயவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

2. சீனாவினதும் இலங்கையினதும் பாதுகாப்புப்படை மற்றும் புலனாய்வுப்பிரிவின் அர்ப்பணிப்புணர்வுடனான செயற்பாடு காரணமாக கொவிட் - 19 நோயாளர்களைக் கண்டறிவதில் இருநாடுகளும் வெற்றிகரமாகச் செயற்படுகின்றன.

3. வைரஸூக்கு எதிராக இலங்கை தொடர்ந்து முன்னெடுக்கம் போராட்டத்திற்கு ஆதரவாக சீனா தொடர்ந்து சுகாதார விநியோகங்களை அன்பளிப்புச்செய்யும்.

4. முதலீடுகள் மற்றும் நிதித்துறையிலான ஒத்துழைப்புக் குறித்தும் ஆராயப்பட்டது.

'கொவிட் - 19 வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருக்கக்கூடியவர்களை அடையாளம் காண்பதற்கு இலங்கையும், சீனாவும் ஒரேமாதிரியான நடைமுறையைப் பின்பற்றியதைச் சீனத்தூதுக்குழுவினர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினர். இரு நாடுகளுமே அவற்றின் பாதுகாப்புப் படைகளினதும், புலனாய்வு அதிகாரிகளினதும் அர்ப்பணிப்பு உணர்வுடனான நடவடிக்கை காரணமாக கொவிட் - 19 நெருக்கடியை வெற்றிகரமாகக் கையாளக்கூடியதாக இருந்தது" என்று ஜனாதிபதி செயலக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

உள்நாட்டுக்கொள்கை, நிறுவன ரீதியான நடைமுறைகளில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் விசேடமானதொரு நெருக்கம் இருக்கிறது என்பதே இந்த அறிக்கையின் வாசகங்கள் மூலம் வெளிக்காட்டப்பட்ட சமிக்ஞையாகும். விசேடமாகப் பாதுகாப்புப் படைகளினதும், புலனாய்வுத்துறையினரதும் ஒத்த வகையிலான நடவடிக்கைகள் பற்றித் தெரிவிக்கப்பட்ட கருத்து சீனா இலங்கை அரசை ஒரு விசேடமான பிரிவிற்குள் வைத்து நோக்குகிறது என்பதை வெளிக்காட்டுகிறது.

இந்த விசேடமான பிரிவு நாடுகள் எனப்படுபவை பாகிஸ்தான், கம்போடியா மற்றும் மியன்மார் போன்ற சீனாவின் குடையின் கீழ் வருகின்ற நாடுகளைக் குறிப்பதாகும். ஆசியப்பாணியிலான எதேச்சதிகார - இராணுவவாதத் பாணியிலான இலங்கையின் தற்போதைய அரசாங்கம் சீனாவினால் மிகவும் விரும்பப்படுகின்ற நாடாக மாறுதலடைந்துவிட்டது என்று இந்தியாவும், அமெரிக்காவும் கருதுமாயின் அதன் விளைவுகள் இலங்கைக்கு அனுகூலமற்றவையாகவே இருக்கும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04