மீனவர்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த கரையோர புகையிரத சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை மற்றும் கல்கிசை புகையிரத நிலையங்களுக்கு இடையில் மீனவர்கள் சிலர் சேகரிக்கப்பட்ட குப்பைகளை புகையிரத பாதையில் இட்டு அதை தீ வைத்து இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் கரையோர புகையிரத சேவை பாதிப்படைந்ததாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்திருந்தது.

எனினும் பொலிஸாரின் தலையீட்டினையடுத்து குறித்த ஆர்ப்பாட்டம் சமரச நிலையில் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.