மாலைதீவில் ஹோட்டல் தொழிலில் ஈடுபடும் இலங்கை பணியாளர்கள் வழமைபோன்று தமது பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும் என மலைதீவுக்கான உயர் ஸ்தானிகர் ஓமார் அப்துல் ரசாக் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் மலைதீவு உயர் ஸ்தானிகர் ஓமார் அப்துல் ரசாக்கிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு சேற்றுக்காலை அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது, கொவிட் 19 தொற்றுப்பரவல் காரணமாக பாதிக்கப்பட்டிருநு்த மாலைதீவு எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில், மாலைதீவில் ஹோட்டல் தொழிலில் ஈடுபடும் இலங்கை பணியாளர்கள் வழமைபோன்று தமது பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும் என உயர்ஸ்தானிகர் பிரதமரிடம் தெரிவித்தார்.

மாலைதீவில் உள்ள இலங்கையர்களின் தகவல் தொடர்பில் உயர்ஸ்தானிகரிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.

வெளிவிவகார அமைச்சின் தகவலுக்கமைய இலங்கை பணியாளர்கள் 15000 - 20000 க்கும் இடையிலானோர் மாலைதீவில் பணியாற்றுவதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

மாலைதீவினை மீண்டும் திறப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர், அந்நாட்டு சுற்றுலாத்துறையை மீண்டும் வழமைக்குத் திரும்பும் என மேலும் தெரிவித்துள்ளார்