அமெரிக்க கறுப்பினத்தவர் ஜோர்ஜ் புளொய்ட்டின் மரணம் அமெரிக்காவை உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் பல விளையாட்டு வீரர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதன் அடுத்த கட்டமாக எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கறுப்பின மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மேற்கிந்திய தீவுகள் அணி Black Lives Matter எனும் சின்னத்தை தங்கள் சீருடையில் அணிந்துள்ளமை விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.