கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 10 கடற்படையினர் குணமடைந்துள்ளனர். 

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 836 ஆக உயர்வடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,042 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,678 ஆக அதிகரித்துள்ளதுடன், தற்போது அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளில் 353 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

மேலும், 40 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.