பாதாள உலக குழுவிடம் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை துப்பாக்கிகள் ; அதிர்ச்சியில் பொலிஸார் : விசாரணைகள் தீவிரம்

30 Jun, 2020 | 07:08 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

தெற்கு பாதாள உலக கும்பல் ஒன்றுக்கு சொந்தமானது என கூறப்படும் ரி- 56 ரக துப்பாக்கிகள் 12 பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால், நேற்று ஹோமாகம - பிட்டிபன பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதன்போது குறித்த பாதாள உலக கும்பல் வலையமைப்புடன் தொடர்புடையதாக நம்பப்டும் பொட்ட கபில எனும் சந்தேக நபரைக் கைதுசெய்துள்ள அதிரடிப் படையினர், மற்றொரு சந்தேக நபரைத் தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இலங்கையில் பாதாள உலக கும்பல் ஒன்றிடம்  இருந்து, ஒரே தடவையில் மீட்கப்பட்ட அதிகப் படியான ஆயுதங்கள் இதுவாகவே கருதப்படுவதாக  பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

 பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய, பாதாள உலகக் குழு ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மையபப்டுத்தி, அதிரடிப்படை கட்டளை தளபதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர்வின்  ஆலோசனையில் பிரகாரம், பிரதான பொலிஸ் பரிசோதகர் வி.எஸ். தர்மபிரிய உள்ளிட்ட குழு  மீகொட - இங்கன்மாருவ பகுதியில் நடவடிக்கை ஒன்றினை நடாத்தியுள்ளனர்.

 இதன்போது பொட்ட கபில எனும் பாதாள உலக சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளுக்கு அமைய ஹோமாகம - பிட்டிபன, மொரகஹஹேன பகுதியில் நடாத்திச் செல்லப்படும் சாகர டேலர்ஸ் எனும் ஆசன பொருட்களை விற்பனை செய்யும்  இடமொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

 இதன்போதே நக்கிருந்து ரீ 56 ரக துப்பககிகள் 12 மீட்கப்பட்டுள்ளன. குறித்த வர்த்தக நிலையத்தில் மிக சூட்சுமமாக இந்த துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்த சில துப்பககிகள் பொலிஸார் அங்கு வருவதற்கு முன்னரே அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

 இந் நிலையிலேயே மற்றொரு சந்தேக நபரைத் தேடிய விசாரணைகள் தொடர்கின்றன.

குறித்த துப்பாக்கிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், தற்போது சிறையில் உள்ள தெற்கின் பிரபல பாதாள உலக கும்பல் தலைவனான கொஸ்கொட தாரகவின் கும்பலுடன்  உள்ள தொடர்புகள் குறித்து தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

 கொஸ்கொட தாரகவின் மிக நெருங்கிய சகாவான, தற்போது சிறையில் உள்ள ககன எனும் நபர் இந்த ஆயுதங்களை இவ்வாறு மறைத்து வைக்க பொட்ட கபிலவிடம் பாரப்படுத்தியதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

 எவ்வாறாயினும் பாதுகாப்பு படைகள் பயன்படுத்தும் இத்தகைய ரீ 56 ரக துப்பாக்கிகள் குறித்த குழுவுக்கு எவ்வாறு கிடைத்தது, அந்த ஆயுதங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள குற்றங்கள் என்ன என்பது தொடர்பில் வெளிப்படுத்திக்கொள்ள பொலிசார் நீண்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47