நாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை மேலும் 02 புதிய  கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இரண்டு தொற்றாளர்களும் பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும், அவர்களில் ஒருவர் பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்திலும், மற்றொருவர் வைகல் தனிமைப்படுத்தல் நிலையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,039 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 749 பேருக்கு கொரோனா தொற்று  உறுதிசெய்யப்பட்டுள்ள அதேநேரத்தில், 904 கடற்படை வீரர்களுக்கும் இலங்கையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,678 ஆக அதிகரித்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட  மொத்த கொரோனா தொற்று நோயாளிகளில் 350 பேர் நாடு முழுவதும் உள்ள 11 வைத்தியசாலைகளில்  தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 

இதேவேளை, 40 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.