நேர்காணல் - இராஜதுரை ஹஷா
2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தமிழ் - முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பே ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியது. பல எதிர்பார்ப்புக்களின் மத்தியில் நல்லாட்சி அரசாங்கத்தை தோற்றுவித்த தமிழ் - முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவில்லை. இதற்கு முதலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் மன்னிப்பை கோர வேண்டும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான வங்குரோத்து அரசியல்வாதிகளின் இனவாத செயற்பாடுகள் நல்லாட்சி அரசாங்கத்தை பலவீனப்படுத்தியது.
தமிழ் - முஸ்லிம் மக்களின் உரிமைகளை ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே பாதுகாக்க முடியும். ஆனால் தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தின் கொள்கைள் மறுதழிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியும் தற்போது ஒரு இனத்தை புறக்கணித்து, செயற்படும் கட்டமைப்புக்குள் உள்ளது. இவ்வாறான பின்னணியை அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய மக்கள் சக்தி உதயமானது. இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு தமிழ் - முஸ்லிம் மக்களின் ஆதரவு ஜனாதிபதி தேர்தலை காட்டிலும் கிடைக்கப் பெறும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன வீரசேகரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,
கேள்வி; தமிழ்- முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புக்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் நிறைவேற்றப்பட்டதா?
பதில்; இல்லை 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு தமிழ்-முஸ்லிம் மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கினார்கள். இவர்களின் அரசியல் ரீதியான தீர்மானம் இறுதியில் ஜனநாயகத்தை தீர்மானித்தது. இவர்களின் எதிர்பாரப்புக்கள் நல்லாட்சியில் நிறைவேற்றப்படவில்லை. அதற்கு முதலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் மன்னிப்பு கோர வேண்டும்.
கேள்வி; வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனமைக்கான காரணம் என்ன?
பதில்; பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவின் வங்குரோத்து அரசியல்வாதிகள் தென்னிலங்கையில் இனவாதத்தை கொண்டு முன்னெடுத்த பிரச்சாரங்கள் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கான தீர்வில் பாரிய தடையாக இருந்தது. தமிழ் - முஸ்லிம் மக்களை பிரித்து தனி பௌத்த மக்களை அவர்களுக்கு எதிராக திசைத்திருப்பி விட்டார்கள். இவ்வாறான செயற்பாடுகள் நல்லாட்சி அரசாங்கத்தை பலவீனப்படுத்தியது.
கேள்வி ; தமிழ்- முஸ்லிம் மக்களை அரசியல்வாதிகள் இனவாதிகளாக சித்தரிப்பதன் காரணம் என்ன?:
பதில்; நாட்டில் உள்ள சாதாரண தமிழ்- முஸ்லிம் மக்கள் இனவாதிகள் அல்ல. இனவாதிகள் என பிறரை தூற்றும் அரசியல்வாதிகளே இனவாதிகள். எதிர்தரப்பில் உள்ள ஒரு சில அரசியல்வாதிகளின் ஆயுதம் இனவாதம்.
தேர்தல் பிரச்சார காலங்களில் பிற இனத்தவர் மீது இனவாதத்தை கட்டவிழ்த்து விட்டு அதனூடாக அவர்கள் தங்களை அரசியலில் தக்கவைத்துக் கொள்கிறார்கள். கொள்கையினை கொண்டு அரசியலுக்கு வருவதை காட்டிலும், இனவாதத்தை கொண்டு அரசியலில் தொடர்ந்து நிலைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.
புலம் பெயர் தமிழர்களை தென்னிலங்கை அரசியல்வாதிகள் ' டயஸ்போரா ' என்று சித்தரித்து அவர்களை மிக கொடுரமானவர்களாக்கி அரசியல் பிரச்சாரம் செய்துக் கொள்கிறார்கள். ஆனால் இவர்கள் சிங்கள சமூகத்தினரும் புலம் பெயர்ந்து வாழ்கின்றார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். ஐக்கிய தேசிய கட்சி இனவாதத்தை ஆயுதமாக கொண்ட அரசியல் செய்யவில்லை.
கேள்வி; ஐக்கிய தேசிய கட்சியின் பிளவு எவ்வாறு தமிழ்- முஸ்லிம் மக்களுக்கு அரசியல் ரீதியான இருப்பு தொட்ர்பில் நம்பிக்கையை ஏற்படுத்தும்.
பதில்; ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. தனி பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளை பெற முடியாமல் போனதற்கு கட்சியின் தலைமைத்துவம் காலம்காலமாக முன்னெடுத்த செயற்பாடுகள் பிரதான காரணியாக அமைந்தன. பெரும்பான்மையின மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்தவத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.
பாரிய போராட்டம், உள்ளக முரண்பாடுகளுக்கு மத்தியில் ஐக்கிய தேசிய கட்சி 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலை எதிர்க் கொண்டது. ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை பெயர் குறிப்பிட் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க இருந்த பிடிவாதம். முரண்பட்ட தன்மை ஐக்கிய தேசிய கட்சி மீது தனி பௌத்த மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை மலினப்படுத்தியது. மறுபுறம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை தங்களின் அரசியல் பிரச்சாரத்துக் பயன்படுத்தி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டார்கள்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களின் கோரிக்கைக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க செவிசாய்க்கவில்லை. எதிர்க்கட்சியாக செயற்பட்டுக் கொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்டார். இதன் காரணமாகவே ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கினோம்.
தமிழ் - முஸ்லிம் மக்களின் உரிமையினை பாதுகாக்கும் பலமான அரசாங்கம் ஐக்கிய மக்கள் சக்தியால் நிச்சயம் தோற்றுவிக்கப்படும்.
கேள்வி; ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
பதில்; ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ இராணுவ ஆட்சிக்கான இலட்சிணங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறார். என்பது பல விடயங்கள் ஊடாக வெளிப்பட்டுள்ளது அரச திணைக்களங்கள், நிறுவனங்களில் சிவில் நிர்வாக சேவைக்கு ஓய்வுப் பெற்ற இராணுவத்தினர் தலைவர்களாக நியமிக்கப்படுகின்றார்கள்.
சிவில் நிர்வாக சேவைக்கு ஓய்வுப் பெற்ற இராணுவத்தினர் நியமிக்கப்படும் போது பொதுத்துறை நிர்வாகத்தில் தேர்ச்சிப் பெற்றவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள். இராணுவத்தினரை கௌரவிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் இராணுவ ஆட்சிக்கான இலட்சியங்களுடன் செயற்படுகிறது.
கேள்வி; கிழக்கில் தொல் பொருள் மையங்களை ஆராயும் ஜனாதிபதி செயலணியின் நோக்கம் எத்தன்மையானது.
பதில்; பொதுத்தேர்தலில் வெற்றிக்கொள்வதற்காகவே இவ்வாறான செயலணிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்த செயலணியின் உறுப்பினர்கள் பௌத்த பிக்குகளாவர். தமிழ்- முஸ்லிம் மக்களை பிரநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் எவரும் செயலணியில் உள்வாங்கப்படவில்லை. இவ்வாறான நிலைமை முஸ்லிம் மக்கள் மத்தியில் மாறுப்பட்ட கருத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறான நிலையில் ஒரு மாகாணத்தை மாத்திரம் இலக்காகக் கொண்டு அதிகாரமிக்க செயலணியை ஸ்தாபித்துள்ளமை சந்தேகத்துக்குரியது. செயலணியின் செயற்பாடு, உறுப்பினர் நியமணம் குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கோரிக்கை விடுத்துளளோம்.
கேள்வி; பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆதரவை பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளதா?
பதில்; நிச்சயமாக, ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய மக்கள் தங்களின் தவறை தற்போது உணர்ந்துக் கொண்டுள்ளார்கள். ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரiவாளர்கள் எதிர்பார்த்த மாற்றம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக ஏற்பட்டுள்ளது. ஆகவே பொத்தேர்தலில் பெரும்பான்மை ஆதரவை பெற்று நிச்சயம் நிலையாக அரசாங்கத்தை ஸ்தாபிப்போம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM