தமிழ் திரையுலகின் முன்னணி கொமடி நடிகரான யோகிபாபு, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கொக்டெய்ல்’ என்ற திரைப்படம் அடுத்த மாதம் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா அச்சம் காரணமாக திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 100 நாட்களுக்கு மேலாகிறது.

இந்நிலையில், தமிழ்த்திரையுலகில் தயாரான திரைப்படங்கள் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாகின்றன.

இதுவரை ஜோதிகாவின் ‘பொன்மகள்வந்தாள்’, கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’, காயத்ரி ரகுராமின் ‘யாதுமாகி நின்றாய்’ உள்ளிட்ட சில படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழ்த் திரையுலகின் முன்னணி கொமடி நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘காக்டெய்ல்’ என்ற திரைப்படம் ஜீ 5 என்னும் டிஜிட்டல் தளத்தில், ஜூலை 10ஆம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குனர் ரா. விஜயமுருகன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் யோகி பாபுவுடன் ரமேஷ் திலக், மிதுன், பாலா ,சுரேஷ், சாயாஜி ஷிண்டே, மனோபாலா, ரோபபோ சங்கர், லொள்ளு சபா சாமிநாதன் ஆகியோருடன் புதுமுக நடிகை ராஷ்மிகா கோபிநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

டிஜிட்டல் தளங்களில் இதுவரை கதையின் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படங்கள் வெளியானது.

இதற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காததால், தற்போது கொமடி நடிகர்களின் பக்கம் டிஜிட்டல் தளங்களின் பார்வை திரும்பியிருக்கிறது. பரீட்சார்த்த முயற்சியாக தற்போது முன்னணியில் இருக்கும் கொமடி நடிகர் யோகிபாபுவின் திரைப்படம் வெளியிடப்படுகிறது.