பாகிஸ்தான் கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு, மூன்று பேர் காயமடைந்தனர்.

பயங்கரவாத தாக்குதலை அடுத்து அலுவலகத்தில் இருந்த பணியாளர்களை பொலிஸார் வெளியேற்றினர்.

இறந்தவர்களில் ஒரு பொலிஸார், இரண்டு பாதுகாவலர்கள் மற்றும் நான்கு பேர் தாக்குதலை மேற்கொண்டவர்கள் அடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிதாரிகள் கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளால் கட்டிடத்தின் மீது தாக்குலை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட குறித்த கட்டிடம் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ளதுடன் அதனைச் சுற்றி பல தனியார் வங்கிகளின் தலைமை அலுவலகங்களும் அமைந்துள்ளன.