கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளின் பட்டியலில் மேலும் 3 அறிகுறிகளை அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் (CDC) இணைத்து அறிவித்துள்ளது.

அதன்படி மூக்கு வடிதல், குமட்டல், வயிற்றுப்போக்கு  ஆகியனவும் அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

ஏற்கனவே காய்ச்சல், இருமல், சுவாசத் திணறல், சோர்வு, உடல் வலி, தலைவலி, மணம்-சுவை அறியும் திறன் இழத்தல், தொண்டை வலி  ஆகியன கொரோனா அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் நபர்களுக்கு தகுந்தாற்போன்று  அறிகுறிகளும், நோயின் தாக்கமும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்ட 2 முதல் 14 நாட்களில் அறிகுறிகள் தெரியும் என கூறப்பட்டுள்ளது.

“யார் வேண்டுமானாலும் லேசான கடுமையான அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம். வயதானவர்கள் மற்றும் இதயம் அல்லது நுரையீரல் நோய் அல்லது நீரிழிவு போன்ற கடுமையான மருத்துவ நிலைமைகளைக் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று மிகவும் கடுமையான சிக்கல்களை உருவாக்கும் அதிக ஆபத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்துக்கும் அதிகமாக உள்ளதோடு,கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் 499,000 இறப்புகள் பதிவாகியுள்ளதாக, ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.