நாட்டில்  கொரோனா நோயாளிகளை அடையாளம் காண நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் ஆயிரத்திற்கும் குறைவான பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று (28.06.2020) இலங்கையில் 833 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அதில் நான்கு புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாதம் முதல் நாட்டில் மொத்தமாக இதுவரை 1,05,105 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று 2,037 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.