நாட்டில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மேல் மாகாணத்தில் பொது இடங்களில் 1,214 நபர்கள் முகக்கவசம் அணியாது நடமாடிய நிலையில் அவர்களை அடையாளம் படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு முகக்கவசம் அணியாது நடமாடியதாக அடையாளப்படுத்தப்பட்ட 1,214 பேரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், முகக்கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடுபவர்களை தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.