(எம்.ஆர்.எம்.வஸீம்)
எம்.சீ.சீ. ஒப்பந்தத்தை வைத்துக்கொண்டு ஜனாதிபதி அரசியல் செய்ய ஆரம்பித்திருக்கின்றார். அத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடமாட்டோம் என அரசாங்கத்தினால் ஏன் பகிரங்கமாக தெரிவிக்க முடியாமல் இருக்கின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ருவன் விஜேவர்த்தன கேள்வி எழுப்பினார்.
கடந்த அரசாங்கம் எம்.சீ.சீ ஒப்பந்தத்தில் இரண்டு கட்டங்களாக கைச்சாத்திட்டிருப்பதாகவும் அதில் 10 டொலர் மில்லியன் தொடர்பாக எந்த கணக்கறிக்கையும் இல்லை என குறித்த ஒப்பந்தம் தொடர்பாக ஆராய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்த குழு தெரிவித்திருப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அமெரிக்காவின் மிலேனியம் செலஞ் கோப்பரேஷன் ஒப்பந்தத்தை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. குறித்த அறிக்கையில் அமெரிக்க அரசாங்கம் கடந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு 10மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஜனாதிபதி தெரிவித்திருந்ததன் பிரகாரம் எமது அரசாங்கத்துக்கு எம்.சீ.சீ.ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிதி வழங்கவில்லை என அமெரிக்க தூதரகம் தெரிவித்திருக்கின்றது. இவ்வாறான நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வும் தேர்தலுக்காக இந்த ஒப்பந்தத்தை பயன்படுத்தி பொய் பிரசாரம் மேற்கொள்வதையிட்டு நாங்கள் கவலையடைகின்றோம். அமெரிக்க பிரஜையாக இருந்த ஜனாதிபதி இந்த விடயத்தில் அவரின் உண்மையான நிலைப்பாட்டை இன்னும் பகிரங்கமாக தெரிவிக்கவில்லை.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தே ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் வெற்றிபெற்றனர். நாட்டை அமெரிக்காவுக்கு தாரைவாக்கப்போவதாக ஜனாதிபதியின் தொண்டர்கள் எமக்கெதிராக பிரசாரம் செய்தார்கள். ஐக்கிய தேசிய கட்சியினர் அமெரிக்காவின் கையாட்கள் என்றார்கள். ஆனால் தற்போது யார் அமெரிக்காவின் கையாட்கள் என்பதை மக்களுக்கு அறிந்துகொள்ளலாம்.
மேலும் மிலேனியம் செலஞ் கோப்பரேஷன் ஒப்பந்தம் ஆரம்பமாக மஹிந்த ராஜபக்ஷ்வின் காலத்திலே மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்திருக்கின்றது. இவ்வாறான நிலையில் எம்.சீ.சீ. ஒப்பந்தம் கைச்சாத்திடுவதா இல்லையா என்பதை ஜனாதிபதியும் பிரதமரும் மக்களுக்கு பகிரங்கமாக தெரிவிக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் தேர்தலில் பொய் பிரசாரத்துக்கு இதனை பயன்படுத்தாமல் நீதியான தேர்தல் ஒன்றை நடத்த இடமளிக்கவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM