சிரியாவின் மத்திய பகுதியான பல்மைரா மற்றும் அஸ் சுஹ்னா பகுதிகளில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இரு தினங்களுக்கு முன்னர் தான் சிரியாவில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் ஒன்றை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுள்ள நிலையில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில்  உள்ள சில இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றது.