(செ.தேன்மொழி)

பேராயர் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நாட்டிற்காக ஆற்றிவரும் சேவைகளை வரவேற்பதுடன், அதற்காக அவருக்கு ஒத்துழைப்பு வழங்கவும் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேதமாச தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள பேராயரின் இல்லத்திற்கு இன்று சனிக்கிழமை சஜித் பிரேதமாசவும் , கட்சி உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவும் சென்றிருந்ததுடன் , இதன்போது பேராயரை சந்தித்து ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டு கலந்துரையாடலிலும் ஈடுப்பட்டிருந்தனர்.

பின்னர் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு கூறிய கட்சித் தலைவர் சஜித் பிரமதாச மேலும் தெரிவித்ததாவது,

நானும் எமது கட்சி உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டாவும் பேராயரை சந்தித்து கலந்துரையாடினோம். கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த சில குழப்பங்கள் மற்றும் கருத்து முரண்பாடுகள் தொடர்பில் பேராயுடன் கலந்துரையாடி சிறந்ததொரு தீர்மானத்திற்கு தற்போது வந்துள்ளோம்.

இந்நிலையில் பேராயர் நாட்டிற்காக செய்துவரும் சேவைகளை நாங்கள் வரவேற்பதுடன் , அவரது செயற்பாடுகளுக்கான எங்களது முழு ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுக்க தயாராக இருக்கின்றோம்.

இதேவேளை கத்தோலிக்க மக்களை அடிப்படையாக அனைத்து செயற்பாடுகளுக்கும் முன்னுரிமை கொடுப்பதுடன் , நாட்டிலுள்ள அனைத்து இன மக்களையும் இணைத்துக் கொண்டு எமது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவே எதிர் பார்த்திருக்கின்றோம்.