உள்ளரங்க பகுதிகளில் காற்றில் மிதக்கும் கொரோனா வைரஸ் கிருமிகளை பிரத்யேக அல்ட்ரா வயலட் விளக்கினை ஒளிரவிடுவதன் மூலம் அழிக்க முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

ஒன்பது மில்லியனுக்கு மேற்பட்ட மக்களை பாதித்து, உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று, இதுவரை ஏறக்குறைய ஐந்து லட்சம் மக்களை உயிர் பலி வாங்கியிருக்கிறது.

காற்றில் பரவும் கொரோனா வைரஸ் கிருமிகளை அழிப்பதற்காக புதிய புதிய உத்திகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஒருவரது சளி, தும்மல், இருமல்... மூலம் வெளியாகும் நீர்த்திவலைகளிலிருந்து பரவும் கொரோனா வைரஸ் கிருமிகள் காற்றில் மிதந்து பின்னரே திட மற்றும் உலோகப் பகுதியில் படர்கிறது. 

Can ultraviolet light kill the novel coronavirus? - Chinadaily.com.cn

இந்நிலையில் உள்ளரங்க பகுதியில் ஒருவர் தும்மினாலோ அல்லது இருமினாலோ அதன் மூலமாக வெளியேறும் கொரோனா வைரஸ் கிருமியை அழிப்பதற்கான புதிய வழிமுறை கண்டறியப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் உள்ளரங்க பகுதிகளில் UVC-lamp எனப்படும் அல்ட்ரா வயலட் விளக்குகளின் தொடர்ந்து இயக்குவதன் மூலம் 25 நிமிடங்களில் 90 சதவீதத்திற்கும் மேலான கொரோனா வைரஸ் கிருமிகளை அழிக்க முடியும் என்பதை ஆய்வின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். 

ஆனால் இந்த விளக்கை பொதுவெளியில் பயன்படுத்த இயலாது என்றும், உள்ளரங்க பகுதிகளில் மட்டும் பயன்படுத்த கூடும் என்பததையும் அறிந்து கொள்ளவேண்டும்.

இதுபோன்ற விளக்குகள் ஏற்கனவே காற்றில் உள்ள இன்புளுயன்சா என்ற வைரஸை அழிப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதும், அதனுடைய மேம்பட்ட அல்லது சீரமைக்கப்பட்ட வடிவம்தான் தற்போது கண்டறியப்பட்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

டொக்டர் பாக்கியராஜ்.