தேசிய அர­சாங்­கத்­தினால் அதி­க­ரிக்­கப்­பட்ட வற்­வ­ரியில் திருத்­தங்­களை கொண்­டு­வரும் முக­மாக தயா­ரிக்­கப்­பட்ட வற்­வரி திருத்­தச்­சட்ட மூலத்தின் அறிக்கை இன்­றைய தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

அர­சாங்க வரு­மா­னத்தில் அதி­க­ரிப்பை ஏற்­ப­டுத்தும் வகையில் கடந்த மே மாதம் 2 ஆம் திகதி (வற்­வரி ) பெறு­மதி சேர்­வ­ரி­யினை அர­சாங்­க­மா­னது 11 வீதத்­தி­லி­ருந்து 15 வீத­மாக உயர்த்­தி­யது. இவ்­வரி அதி­க­ரிப்­பா­னது சாதா­ரண மக்­களை எந்த விதத்­திலும் பாதிக்­காது என அர­சாங்­கத்­தினால் உறுதிமொழி வழங்­கப்­பட்­டது.

இருந்த போதிலும் வற்­வரி அதி­க­ரிப்­பினால் நாட­ளா­விய ரீதியில் வியா­பா­ரிகள் பல்­வேறு பாதிப்­பு­களை எதிர்­நோக்­கி­ய­தோடு பொது­மக்­க­ளுக்கும் இவ்­வரி அதி­க­ரிப்­பா­னது பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இவ்­வா­றான நிலையில் வற்­வ­ரியில் திருத்­தங்­களை கொண்­டு­வ­ரு­மாறு வலி­யு­றுத்தி கடந்த மூன்று வாரங்­க­ளாக நாட்டின் பல பிர­தே­சங்­களில் ஒன்­றி­ணைந்த வர்ர்­தக நிலைய உரி­மை­யாளர் சங்கம் உட்­பட வர்த்­தக சங்­கங்­களின் பிர­தி­நி­தி­க­ளினால் ஆர்ப்­பாட்­டங்­களும் கடை­ய­டைப்பு போராட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

இந்த போராட்டம் கார­ண­மாக நாட்­டின்­பல பிர­தே­சங்­களில் மக்­களின் இயழ்பு வாழ்கை பாதிக்­கப்­பட்­ட­தோடு வியா­பார நட­வ­டிக்­கை­களும் ஸ்தமி­த­ம­டைந்­தன.

இவ்­வி­ட­யம்­தொ­டர்பில் கவனம் செலுத்­திய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வற் வரியில் உட­ன­டி­யாக திருத்­தங்­களை கொண்­டு­வர வேண்டும் என்ற கோரிக்­கை­யினை விடுத்ததோடு வற்வரி திருத்தத்திற்கான குழுவொன்றையிம் நியமித்தார். அந்தவகையில் இந்த குழுவானது இன்றைய தினம் தயாரித்த வற்வரி திருத்தச்சட்ட மூல அறிக்கையினை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது.