நாட்டில் இன்றையதினம் சனிக்கிழமை மேலும் 20 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவர்களில், 6 பேர் இரணவில் வைத்தியசாலையிலிருந்தும், 5 பேர் காத்தான்குடி வைத்தியசாலையிலிருந்தும், 4 பேர் வெலிக்கந்த வைத்தியசாலையிலிருந்தும், 2 பேர் தெல்தெனிய வைத்தியசாலையிலிருந்தும்,  அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை,  பனாகொட இராணுவ வைத்தியசாலையிலிருந்து தலா ஒருவரும் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,639 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் 2,014 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 364 பேர் நாடு முழுவதும் உள்ள 11 வைத்தியசாலைகளில்  தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 

அத்துடன் 42 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தின் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.