(நா.தனுஜா)
நாட்டில் தம்மைப் பதிவுசெய்து கொள்ளாமல் இயங்கும் 40 சதவீதத்திற்கும் அதிகமான சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்கள் பதிவுசெய்வதை இலகுவாக்கும் வகையில் நாடு முழுவதிலும் வியாபார சேவை நிலையங்களை நிறுவவுள்ளதாக இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் இலங்கையில் வியாபாரங்களைப் பதிவுசெய்வது என்பது மிகவும் இலகுவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் வியாபார சேவை நிலையங்களை நிறுவுவதற்கான அனுமதியை சிறிய மற்றும் நடுத்தரளவிலான தொழிற்துறை மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சுக்கு அரசாங்கம் வழங்கியிருக்கிறது. இந்த சேவை நிலையங்களின் ஊடாக வியாபார ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகள் இலகுபடுத்தப்படுவதுடன் வியாபார உதவிச்சேவைகளும் வழங்கப்படும்.
இந்த வியாபாரச்சேவை நிலையங்கள் வியாபாரங்களைப் பதிவு செய்வதற்கான செயன்முறையை எளிமைப்படுத்துவதுடன் தொழில்நுட்பம், தரக்கட்டுப்பாடு மற்றும் சந்தைகளை அணுகுதல் போன்ற செயற்பாடுகளுக்கான உதவிகளையும் வழங்குகின்றது.
அதற்கு மேலதிகமாக சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு சேவையளிக்கும் வகையில் வியாபார அபிவிருத்திச்சேவை வழங்குநர்கள், ஒழுங்குபடுத்தல் அதிகார அமைப்புக்கள், நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றுடன் தொடுக்கப்பட்ட இணையக் கட்டமைப்பொன்று வடிவமைக்கப்படும்.
இச்சேவை வழங்கல் நிலையங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட செயலகங்களில் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்படும். மாவட்ட மட்டத்தில் சேவை வழங்குவோர் இந்த நிலையங்களுடன் இணைந்து செயலாற்றுவதனூடாகத் தேவைப்படும் சேவைகளைப் பெற்றுக்கொடுப்பார்கள்.
இவற்றை நிறுவுவதற்கான பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் ஜேர்மனி ஆகியன ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து முன்னாள் தொழிற்துறை மற்றும் வணிக அமைச்சு ஆகியவற்றுடன் பணியாற்றியிருந்தன. அதன் முதற்கட்டமாக மாத்தளை, நுவரெலியா, பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் 4 வியாபாரசேவை நிலையங்கள் நிறுவப்படவுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர் டெனிஸ் சைபி,
'ஊவாக மற்றும் மத்திய மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் எமது உதவித்திட்டம் நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். வியாபாரத்தை ஆரம்பிக்க எதிர்பார்க்கும் அனைவருக்கும் தமது வியாபாரத்தைப் பதிவுசெய்து கொள்வது மற்றும் உள்நாட்டு வியாபாரசேவை வழங்குநர்களிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்வது ஆகியவை மிகவும் இலகுவானதாக அமைந்திருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM