இலங்கையின் கடல் எல்லை பாதுகாப்பில் பலவீனம், பயங்கரவாதம் குறித்து அமெரிக்கா அதிரடித் தகவல்

Published By: Digital Desk 3

27 Jun, 2020 | 01:42 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையின் கடல் எல்லை மற்றும் பாதுகாப்பில் காணப்படும் பலவீன நிலை எச்சரிக்கை மிக்கதாக அமைகிறது.

இவ்வாறான அச்சுறுத்தல்களிலிருந்து மீள ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஜப்பான்  தரப்புகளுடன் இணைந்து பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் எல்லை பாதுகாப்பு முகாமைத்துவம் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன.

மேலும் கடல் பாதுகாப்பு விடயத்தில் அமெரிக்காவுடனும் தனது செயற்பாடுளை இலங்கை விஸ்தரித்துக் கொண்டுள்ளமை முக்கியமானதென அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் பயங்கரவாதம் தொடர்பான 2019 ஆம் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது .

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

அமெரிக்க கடற் பாதுகாப்பு படை மற்றும் அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் கீழ் இயங்கும் ஏற்றுமதி கட்டுப்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய கடல் எல்லை பாதுகாப்பு பிரிவுடன் இலங்கை கடற்படை பல்வேறு பயிற்சிகளையும் முன்னெடுத்து வருகிறது. இந்த திட்டத்தின் ஊடாக கடல் பாதுகாப்பு சார்ந்த இரு தரப்பு ஒத்துழைப்புகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் பாதுகாப்பு  பிரிவு இலங்கையுடன் தொடர்ந்தும் ஒத்துழைப்புகளுடன் செயற்பட்டு வருகின்றது. இதன் பிரகாரம் இலங்கை கடற்படையின் சிறப்பு ரோந்து படகு பிரிவு மற்றும் வேகமாக தாக்குதல் நடவடிக்கைளில் ஈடுப்பட கூடிய பிரிவு என பல்வேறு வழிகளில் இலங்கையுடன் ஒன்றிணைந்து அமெரிக்கா செயற்படுகிறது.

அத்துடன் இலங்கையின் விடுதலை புலிகளுக்கு எதிரான போர் 2009 ஆம் ஆண்டில் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட போதிலும் அந்த இயக்கத்தின் நிதி வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகிறது.

அதே போன்று 2009 இல் இருந்து இலங்கையில் எவ்வித தாக்குதல் சம்பவங்களும் இடம்பெறவில்லை. ஆனால் 13 புலி ஆதவாளர்கள் 2014 ஆம் ஆண்டில் மலேசியாவில் கைது செய்யப்பட்டனர்.

மறுப்புறம் 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் ஊடாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தெற்காசிய செயற்பாடுகள் வெளிப்பட்டது.

இதன் போதே இலங்கையின் கடல் பாதுகாப்பு குறித்து கூடிய அவதானம் செலுத்த வேண்டியது கவனத்தில் கொள்ளப்பட்டது. எவ்வாறாயினும் உலக பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் பயங்கரவாத அச்சுறுத்தலுக்குறிய பல நாடுகளுடன் வலுவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30