அச்சுவேலி பொதுச்சந்தைக்கான புதிய கட்டிட நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

27 Jun, 2020 | 01:36 PM
image

பத்து மில்லியன் ரூபா சபை நிதியில் அச்சுவேலி பொதுச் சந்தைக்கான புதிய கட்டிட நிர்மாணப்பணிகள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் ஆரம்பிக்கப்பட்டு துரித கதியில் இடம்பெற்று வருவதாக பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கொரோனா எச்சரிக்கை காரணமாக வரையறுக்கப்பட்டவர்களுடன் அமைதியான முறையில் அச்சுவேலி சந்தைக்கான புதிய கட்டிட நிர்மாண வேலைகளை அடிக்கல் வைத்து ஆரம்பித்து வைத்துள்ளோம். 

பிரதேச சபை உறுப்பினர்கள், செயலாளர், உத்தியோகத்தர்கள் என வரையறுக்கப்பட்டவர்களுடன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வலிகாமம் கிழக்கில் 18 ஆயிரம் வரையான விவசாயிகள் வரையில் வாழ்கின்றனர். அவ் விவசாயிகளுக்கு ஏற்ற சந்தை அமைப்பினை துரிதமாக சிறந்த முறையில் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய தேவையுள்ளது.

இந் நிலையில் அமையப்பெறும் சந்தைக்கட்டிடம் சகலருக்கும் வசதியான முறையில் வியாபார முயற்சிகளை முன்னெடுக்கத்தக்க வசதிகளுடன் அமையவுள்ளது.

அச்சுவேலி பொதுச் சந்தை யாழ் மாவட்டத்தில் முக்கியமான சந்தைகளில் ஒன்றாகத் திகழ்கின்றபோதும் சந்தையின் கட்டட உட்கட்டமைப்பு வசதிகள் காலங்கடந்த நிலையில் அபாயகரமான நிலையை அடைந்துள்ளன.

அதேவேளை சந்தையில் இடப்பற்றாக்குறையும் காணப்பட்ட நிலையில் ஏற்கனவே வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தற்காலிக கொட்டகைகளை அமைத்து வியாபார முயற்சிகளுக்கு வசதி ஏற்படுத்தி கொடுத்திருந்த நிலையில் நிரந்தரமான சந்தைக்கட்டிட வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தும் நோக்கிலேயே தற்போது வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சந்தை வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள சந்தைக்கட்டிட வேலைகளுக்கு ஒத்துழைத்தல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுதல் அடிப்படையில் தற்போது அச்சுவேலி வல்லை வீதியில் தனியார் கட்டிடம் ஒன்றில் சந்தைத் தொழிற்பாடுகளுக்கு பிரதேச சபை வசதி ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.  

அச்சுவேலி சந்தைக்ககட்டுமானப் பணிகள் 12.22 மில்லியன் மதிப்பீட்டுத்தொகையில் மூன்று மாத ஒப்பந்த நிபந்தனையில்; வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் கடந்த மார்கழி மாதம் கேள்விக்கேரல்கள் இடம்பெற்றன. உரிய கேள்விக்கோரல் நடைமுறைகளின் பிரகாரம் தற்போது ஒப்பந்த தாரர்களிடம் வேலைகள் கையளிக்கப்பட்டு வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34