தமிழ் திரை உலகில் லேடி சுப்பர் ஸ்டாராக, வலம் வரும் நடிகை நயன்தாராவை விட, கூடுதலாக ஊதியம் பெற்று, நடிகை மாளவிகா மோகனன் நயனை வீழ்த்தி, சாதித்திருக்கிறார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தபேட்டஎன்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிக்கும்மாஸ்டர்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர், புதிதாக பொலிவுட் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் கடைசியாக வெளியானமாம்என்ற ஹிந்தி திரைப்படத்தை இயக்கிய ரவி உதயவர் என்பவர் இயக்கத்தில் உருவாகும்.

புதிய பெயரிடப்படாத எக்சன் திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நடிகை மாளவிகா மோகனனுக்கு சம்பளமாக  இந்திய மதிப்பில் ஐந்துகோடி ரூபாய் வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தற்போது வரை தமிழ் திரையுலகில் லேடி சுப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா, ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு நான்கு கோடி ரூபாயை ஊதியமாக பெற்று வருகிறார்.

நயன்தாரா வாங்கி வந்த சம்பளத்தை, சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் ஆகிய நட்சத்திர நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணிக்கு முன்னேறிய நடிகை மாளவிகா மோகனன் மூன்றாவது படத்திலேயே ஐந்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கி நயன்தாராவை பின்னிற்கு தள்ளியிருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.

இதனிடையே, நடிகை மாளவிகா மோகனன்பியாண்ட் க்ளவுட்ஸ்என்ற ஹிந்தியில் வெளியான படத்தில் நடித்திருக்கிறார் என்பதும், இந்த படத்தில் நடிப்பதற்காக தற்போது தற்காப்பு கலையில் பயிற்சி எடுத்து வருகிறார் என்பதும், இவர் இணையத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.