கண்டி , பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட ஆய்வகத்தில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட தீயால் அது முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொறியியல் பீடத்தில் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள ஆய்வகத்தில் நேற்று இரவு 7.45 மணியளவில் இந்த தீ பரவியுள்ளது.

இந்நிலையில், கண்டி மாநகர சபையின் தீயணைப்பு வீரர்களும், பொறியியல் பீட மாணவர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த தீயினை 8.30 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

மின்கசிவினால் குறித்த தீ ஏற்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.