எம்.சி.சி. மூலம் கிடைக்கப் பெற்ற நிதி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி , பிரதமர் பொறுப்பு கூற வேண்டும் - ரோஹித அபேகுணவர்தன

Published By: Digital Desk 3

26 Jun, 2020 | 06:52 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நல்லாட்சி அரசாங்கம்   எம். சி. சி. ஒப்பந்தத்தின் ஊடாக  நாட்டின் இறையாண்மையை விட்டுக்  கொடுத்துள்ளது.  ஒப்பந்தத்தின் முதற்கட்ட  நிதியாக  கிடைக்கப் பெற்ற 10 மில்லியன்  நிதி தொடர்பில்   முன்னாள்    ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை   உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்பு  கூற வேண்டும் என முன்னாள்   பாராளுமன்ற உறுப்பினர்  ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பொதுஜன  பெரமுனவின்  காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்   பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு  கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நல்லாட்சி    அரசாங்கம்  480   மில்லியன்   அமெரிக்க  டொலரை  பெற்றுக் கொள்ளும் நோக்கில்  கைச்சாத்திட    முயற்சித்த   எம். சி. சி  ஒப்பந்தம் குறித்து ஆராய்ந்த   மீளாய்வு குழுவினர்  ஒப்பந்தம் தொடர்பான ஆய்வு அறிக்கையினை  ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார்கள்.

ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள  விடயங்கள் அனைத்தையும் எவ்வித   ஒழிவு  மறைவுமின்றி மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  முன்னெடுக்குமாறு ஜனாதிபதி   அதிகாரிகளுக்கு பணிப்புரை  விடுத்துள்ளார்.

எம். சி.  சி ஒப்பந்தத்தின் முதல் இரண்டு கட்டங்கள் கடந்த   2017 மற்றும்  2018 ஆம் ஆண்டுகளில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதற்கு   முதல் கட்டமாக 7.4 மில்லியன் அமெரிக்க டொலரும்,  இரண்டாவதாக  2.6 மில்லின்  அமெரிக்க டொலரும் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்  அறிக்கையில் குறிப்பிடப்பட்டன. ஆனால்    கிடைக்கப் பெற்ற  நிதி குறித்த எவ்விதமான ஆவணங்களும்   சமர்ப்பிக்கப்படவில்லை என   ஆய்வு குழு குறிப்பிட்டுள்ளது.

எம். சி . சி ஒப்பந்தம் தொடர்பில்  நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து  இரகசியத்தன்மையினை பேணியது. ஒப்பந்தத்தில்  உள்ளடக்கப்பட்ட விடயங்கள் ஏதும்   பாராளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும்  பகிரங்கப்படுத்தப்படவில்லை.  காணி  அபிவிருத்தி, மற்றும்  காணி அளவீடு  , அபிவிருத்தி ஆகிய   இரண்டு   விடயங்களை உள்ளடக்கிய  ஒப்பந்தம்  என்று  மாத்திரமே  குறிப்பிடப்பட்டது.

ஒப்பந்தத்தில்  முதலிரண்டு பகுதிகள்  கைச்சாத்திடப்பட்டுள்ளன.   கைச்சாத்திடும் போது   இணக்கம் தெரிவிக்கபட்ட விடயங்கள்  என்ன மற்றும் கிடைக்கப் பெற்ற   10 மில்லியன்  நிதிக்கு என்ன நடந்தது என்ற  கேள்விகள்  பல  தற்போது எழுகின்றன. இவற்றுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  மற்றும்  முன்னாள் பிரதமர்  ரணில்  விக்ரமசிங்க ஆகியோர்  பொறுப்பு கூற வேண்டும்.  குறிப்பாக  தனக்கு ஏதும் தெரியாது. நான் அறியவில்லை என முன்னாள்  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பொறுப்பில் இருந்து விலகுவது போல் விலக முடியாது.

நல்லாட்சி அரசாங்கம்  எம் . சி. சி. ஒப்பந்தத்தின் ஊடாக  நாட்டின் இறையாண்மையினை விட்டுக் கொடுத்துள்ளது.    2017 மற்றும் 2018 அ ஆம் ஆண்டுகளில் ஒப்பந்தத்தின் முதலிரண்டு  பகுதிகளும்    கைச்சாத்திட்டதால் கிடைக்கப் பெற்ற  நிதி  குறித்து  மக்களுக்கு உண்மை  நிலையினை  கடந்த அரசாங்கம் தெரிவிக்க வேண்டும். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58