வடமாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையிலா அல்லது தாண்டிக்குளத்திலா அமைப்பது தொடர்பாக கருத்துக் கணிப்பொன்றை நடத்தி ஒருவார காலத்தினுள் இறுதித்தீர்மானம் எடுப்பதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. 

வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது என்பது தொடர்பான சர்ச்சைகள் வலுவடைந்துள்ள நிலையில் எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் விசேட கூட்டம் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது