(எம்.மனோசித்ரா)
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் வேலைத்திட்டங்களுக்காக இலங்கைக்கு சீன அரசாங்கத்தினால் 600 மில்லியன் ரூபா பெருமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்தல் வேலைத்திட்டங்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்து வகைகள் என்பன கடந்த காலங்களில் இலங்கைக்கு தடையின்றி கிடைக்கப் பெற்றன. வைரஸ் பரவைலக் கட்டுப்படுத்துவதற்கான எதிர்கால சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டங்களை மேலும் பலப்படுத்தும் வகையில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான உதவிகள் சுகாதார அமைச்சுக்கு தொடர்ந்தும் கிடைக்கப் பெறுகின்றன.
அதற்கமைய நேற்று முன்தினம் வியாழக்கிழமை சீன அரசாங்கத்தினால் 600 மில்லியன் ரூபா பெருமதியுடைய மருத்துவ உபகரணங்கள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான பதில் சீன தூதுவரினால் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் இவை கையளிக்கப்பட்டன. முகக் கவசங்கள் , சுகாதார பாதுகாப்பு அங்கிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இவற்றில் உள்ளடங்குவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி ,
ஆரம்பம் முதல் சீன அரசாங்கம் இலங்கைக்கு பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகிறது. சீனாவில் வைரஸ் பரவல் தீவிரமடைந்த போது அந்நாட்டுக்கு சகோதரத்துவத்துடன் உதவ வேண்டும் என்று இலங்கை தீர்மானித்தது. தற்போது 600 மில்லியன் ரூபா பெருமதியான மருத்துவ உபகரணங்களை சீனா எமக்கு வழங்கியிருக்கிறது. இலங்கை மக்களின் நிலைமையை கவனத்தில் கொண்டு சீனா வழங்கும் உதவிகளுக்கு நாம் மதிப்பளிக்கின்றோம்.
கடந்த காலங்களில் சீனப் புத்தாண்டின் நிறைவில் சுமார் 10 000 சீனர்கள் இலங்கைக்கு வருகை தந்திருந்த போதிலும் எம்மால் வழங்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு ஆலோசனை வழிகாட்டல்களை பின்பற்றி எந்தவொரு இலங்கை பிரஜைக்கும் பாதகம் ஏற்படாமல் செயற்பட்டனர். இலங்கை மீது சீனா கொண்டுள்ள நட்புறவுக்கு அரசாங்கத்தின் சார்பில் நான் கௌரவத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM