நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 9 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்மூலம், கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 820 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றக்குள்ளான மொத்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 904 ஆகும். மேலும் 84 பேர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2010 ஆக அதிகரித்துள்ளது.