இந்தியாவின் பீகார் மாநிலத்தில்  இடி மின்னல், மழையால் 83 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் துறை தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபா நிவாரணம் வழங்கப்படும் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. 

இதன் காரணமாக  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றும் வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. 

இந்நிலையில், இடி மின்னல் மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் பலர் உயிரிழந்துள்ளனர். பீகாரில் மட்டும் பல்வேறு இடங்களில் இடி மின்னலுக்கு 83 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.