(ஆர்.யசி)
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன ஜூலை 2 ஆம் திகதி திரையரங்குகள் திறக்கப்படும் என தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
கொவிட் -19 தாக்கத்தை அடுத்து இலங்கையிலுள்ள திரையரங்குகள் மூன்று மாதங்களாக மூடியுள்ள நிலையில் பலருக்கு இதனால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வாழ்வாதார பிரச்சினைகளும் எழுந்துள்ளது. ஆகவே இதனை கருத்தில் கொண்டு திரையரங்குகளை திறக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஜூலை மாதம் 2ஆம் திகதியில் இருந்து திரையரங்குகள் திறக்கப்படும்.
எனினும் இப்போது இருக்கும் ஆசனங்களில் 50 வீதமான ஆசனங்களை மட்டுமே பயன்படுத்த முடியும். அதாவது சமூக இடைவெளியை கையாள 50 வீதமான ரசிகர்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் அனுமதி வழங்க வேண்டும் என்ற கட்டாயம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமா என்பது குறித்து ஆராயப்படுகின்றது. திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பிரதமர் இடையில் நாளைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
அதுமட்டும் அல்லாது த நியூஸ் பேப்பர் என்ற திரைப்படம் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இதில் சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பு படைகளின் அதிகாரிகள் தமது அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக திரைப்படத்தை பார்க்க முடியும். அவர்களின் உறவினர்கள் எவருக்கும் இந்த சலுகை கிடையாது. அவர்கள் பணம் கொடுத்தே பார்வையிட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM