ஐ.தே.க.வின் தேர்தல் பிரசாரம் ஞாயிறு முதல் ஆரம்பம்

25 Jun, 2020 | 07:03 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது தேர்தல் பிரசார நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (28) கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுடன்,  மாவட்ட மற்றும் தேர்தல் தொகுதி மட்டங்களிலான பிரசாரங்கள் நவீன தொழிநுட்பத்தினூடக ஜூலை 4 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக  ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இவ்வாறான மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொள்பவர்கள் குறித்து தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தினை கவனத்தில் கொண்டு செயற்படுமாறு ரணில் விக்கிரமசிங்க கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் சர்வ மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

அதற்கமைய அவர் இத்தேபானே தம்மாலங்கா தேரர், பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி பெல்லன்வில தம்மரத்ன தேரர் , மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:58:45
news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24
news-image

'சுத்தமான இலங்கை' திட்டத்தின் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான...

2025-02-18 17:30:11
news-image

வரட்சியான வானிலை ; நீர் விநியோகத்தில்...

2025-02-18 17:31:34
news-image

ஹோமாகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால்...

2025-02-18 17:22:49
news-image

அநுராதபுரத்தில் ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-02-18 15:51:52
news-image

யாழ். மாவட்ட வீதிகளின் முழு விபரங்களும்...

2025-02-18 17:18:39
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-02-18 15:23:00