பெருந்தோட்ட தொழிலாளிகளின் காணி உரிமைகளை வென்றெடுப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் ஹட்டன் நகரில் இன்று நண்பகல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பெருந்தோட்ட சமூக காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர் எஸ்.டி. கனேசலிங்கம் அவரின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் பேரணியாக பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு ஹட்டன் நகர சபை மண்டபத்திலிருந்து ஹட்டன் பஸ் தரிப்பிடம் வரை சென்று மீண்டும் நகர சபை மண்டபம் வரை சென்றடைந்தது.

அத்தோடு 200 வருட காலமாக வாழ்ந்து வரும் மலையக மக்களுக்கு வீடு மற்றும் 20 பேர்ச் காணி உரிமையும் வழங்கப்பட வேண்டும் என வழியுறுத்தப்பட்டமையும் குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)